புதுச்சேரியில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் கூடியது. சட்டப்பேரவையில், முதலமைச்சர் நாராயணசாமி, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடுகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானங்களை கொண்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து அது அரசு தீர்மானமாக ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு, பல்வேறு கூட்டணி கட்சியினர் மற்றும் அமைப்பினர் முதலமைச்சர் நாராயணசாமியைச் சந்தித்து நன்றி தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி பொறுப்பாளர் பாவாணன் தலைமையில் அக்கட்சியினர் முதலமைச்சர் நாராயணசாமியை சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இஸ்லாமியருக்கான காவலர் பணி: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு