இளநிலை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு இருப்பது போலவே முதுநிலை மருத்துவ படிப்பிலும் நீட் தேர்வு உள்ளது. நீட் இடஒதுக்கீட்டில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு போதிய இடங்கள் கிடைப்பது இல்லை. அங்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதும் இல்லை. முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை. மருத்துவ படிப்பில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், கிராமப் புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவர் அலுவலர் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ப்பட்டது. இந்த மனுக்கள் மீது நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (ஆகஸ்ட் 31) விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில், முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இடங்களை ஒதுக்குவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு பணியிலிருக்கும் மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்புகளில் சேர இட ஒதுக்கீடு வழங்குவது (அல்லது) வழங்காமல் இருப்பது குறித்து முடிவெடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : பிரசாந்த் பூஷணின் தண்டனை விவரம் இன்று வெளியீடு!