ETV Bharat / bharat

முறையற்ற பரபரப்பு செய்திகளாக மாறி வரும் தற்கொலைச் செய்திகள்

author img

By

Published : Jun 18, 2020, 1:16 PM IST

செய்தி நிறுவனங்கள் தற்கொலைச் செய்திகளை பரபரப்பாக வெளியிடுவதன் மூலம் தற்கொலை செய்யும் எண்ணம் கொண்ட நபர்கள் அதன் மூலம் தூண்டப்பட்டு தானும் முயற்சிக்கிறார்கள். இதனை தடுக்க செய்தி நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும் என்று விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்த்தி தர்.

Suicide
Suicide

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், ஒரு சோகமான செய்தியை தாங்கி வந்தது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் காலமானார். அவரது உடல், மும்பையில் ஆடம்பரமான அவரது பிளாட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அடுத்த நாள், அது தற்கொலை என்று உடற்கூராய்வு உறுதிப்படுத்தியது.

நல்ல எதிர்காலம் கொண்ட 34 வயதான இளம் நடிகரின் வாழ்க்கை முடிந்து விட்டது. இந்த உண்மையை நாம் மாற்ற முடியாது. ஆனால் அந்த தற்கொலைச் செய்தியை ஊடகங்கள் கையாண்ட விதம் கண்டிப்பாக மாறியாக வேண்டும்.

அவரது தற்கொலைச் செய்தி கிடைத்த சில நிமிடங்களில், தொலைக்காட்சி சேனல்கள் அன்றைய `பிரேக்கிங்' செய்திகளுக்கு மாறின. ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார் என்பதை விட சுஷாந்த் சிங் ராஜ்புத் எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என்பதில் தான் அதிக கவனம் செலுத்தப்பட்டது. பெரும்பாலான தொலைக்காட்சி சேனல்கள் சுஷாந்த் சிங் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட விதத்தை நாள் முழுவதும் சலிப்பின்றி விவரித்தன.

அது எந்த அளவுக்குச் சென்றதென்றால், அவரது படுக்கையறையின் கதவு திறந்தபோது, உடல் தொங்கிய நிலையில், தெரிந்த துணியின் நிறத்தை பார்வையாளர்களிடம் கூறியதைச் சொல்லலாம். உடலை வீட்டிலிருந்து வெளியே எடுத்தபோது அதுவும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. பாட்னாவில், வீட்டிற்குத் திரும்பி சோகத்தில் இருந்த குடும்ப உறுப்பினர்களிடம், பேட்டி கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியது, அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் காரணத்தை உணரும் வரை தொழிலில் ஏற்பட்ட தோல்வி, பெண் தோழியுடனான பிரிவு முதல் நிதி நெருக்கடி போன்ற காரணங்கால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று ஊகங்களாக அவர்கள் செய்திகளை வெளியிட்டனர்.

எதிர்பார்த்தபடி, மறுநாள் காலை செய்தித்தாள்களும், நடிகரின் படம் மற்றும் அவர் தனது விலைமதிப்பற்ற வாழ்க்கையை முடித்துக்கொண்டது பற்றிய செய்திகளை விவரங்களுடன் முதல் பக்கத்தில் வெளியிட்டன.

இதற்காக அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. மின்னணு ஊடகங்கள் ‘யார் செய்திகளை முதலில் கொடுப்பது' என்பதற்காகவும் செய்தித்தாள்கள் மிகச்சிறிய விவரங்கள், காட்சி மற்றும் படங்கள் ஆகியவற்றை யார் வெளியிடுகிறார்கள் என்பதற்காகவும் ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றன!

செய்தி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது தான், அதில் சந்தேகமில்லை, ஆனால் தற்கொலைச் செய்தி அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? முக்கியத்துவம் வாய்ந்ததா இல்லையா என்று வேறுபடுத்துவது கடினம் என கூறலாம். ஆனால் பொதுவாக தற்கொலை பற்றிய தொடர்ச்சியான செய்திகள் பலரை தற்கொலை செய்யத் தூண்டுகிறது என்பதை பலரும் மறந்து விடுகின்றனர்.

உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட 50க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள், தற்கொலை தொடர்பான செய்தி ஒளிபரப்பு என்பது அது ஒளிபரப்பாகும் கால அளவு மற்றும் முக்கியத்துவத்தை பொறுத்து பாதிக்கப்படக்கூடிய நபர்களிடையே தற்கொலைக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது என்று கூறுகின்றன.

தற்கொலை பற்றி ஏற்கனவே நினைத்துக் கொண்டிருக்கும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு ஊடகங்களில் அவர்கள் பார்க்கும் அல்லது படித்தவற்றின் அடிப்படையில் இந்த செயலை செய்வதற்கான தாக்கத்தை ஏற்படுத்தலாம். பிரபலங்களின் பரபரப்பான தற்கொலைகள் அத்தகைய நபர்களை தற்கொலை செய்துகொள்ள 'தூண்டக்கூடும்'. ஏனெனில், அதைச் செய்வது `சரி 'என்று அவர்கள் உணருகிறார்கள், அது உடனடியாக அவர்களை பிரபலமாக்கும் என நினைக்கத் தூண்டும்.

தற்கொலை பற்றிய செய்திகளை ஊடகங்களில் காண்பிப்பது தற்கொலை சம்பவங்களை 2.5 மடங்கு அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சி சுட்டிக் காட்டுகிறது. `காபிகேட் தற்கொலைகள்’ எனப்படும் மற்றவர்களின் தற்கொலையை பார்த்து தானும் செய்ய முயலும் ஒரு செயல் காரணமாக பிரபலங்களின் தற்கொலைகளுக்குப் பிறகு தற்கொலை விகிதங்கள் உயர்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், தற்கொலைத் தடுப்பில் ஊடகங்கள் ஆற்றக்கூடிய நேர்மறையான பங்களிப்புக்கான ஆதாரங்களும் அதிகரித்து வருகின்றன. நெருக்கடிகளுக்கு தற்கொலை அல்லாத மாற்று வழிகளை முன்வைப்பதன் மூலம் ஊடகங்கள் ஏற்படுத்தக்கூடிய விளைவுதான் `பாபஜெனோ ஆய்வுகள்’.
(மொஸார்ட்டின் ஓபரா தி மேஜிக் ப்ளுட்-ல் உள்ள கதாபாத்திரத்தின் நினைவாக இது பாப்பஜெனோ விளைவு என்று அழைக்கப்படுகிறது. பாபஜெனோ தனது காதலை இழந்துவிட்டோம் என்று அஞ்சி தற்கொலைக்குத் தயாராவார். ஆனால், இறப்பதைத் தவிர வேறு சில மாற்று வழிகளை நினைவூட்டுவதன் மூலம் கடைசி நிமிடத்தில் அவரை, மூன்று சிறுவர்கள் காப்பாற்றுவார்கள்)

பரபரப்பான செய்திகளைக் குறைப்பதன் மூலம் தற்கொலைத் தடுப்புக்கு ஊடகங்கள் மிகவும் பொருத்தமான பங்களிப்பை வழங்க முடியும், மேலும் தற்கொலை மற்றும் பாதகமான சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த செய்திகளை அதிகப்படுத்தலாம்.

தற்கொலைகளுக்குப் பின்னால் ஒரு காரணமும் இல்லை. ஆனால், பெரும்பாலும், மனச்சோர்வின் விளைவாக மனச்சோர்வு/மன அழுத்தம் முதல் கடுமையான மனநோய்கள் வரை இருக்கலாம். சில நேரங்களில் இது மரபணு காரணமாகவோ அல்லது குடும்பத்தில் யாராவது தற்கொலை செய்து கொண்டதாலோ இருக்கலாம்.
ஆனால் மனநலக் கோளாறுகளை இகழாமல், பிற நோய்களைப் போல ஏற்றுக்கொண்டு, மனநல பாதுகாப்பு என்பது அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருந்தால் தற்கொலைகளைத் தடுக்க முடியும்.

சில நேரங்களில் தற்கொலை எண்ணத்தில் இருக்கும் ஒருவரிடம் ஆறுதலாகப் பேசுவது மற்றும் அவர் பேசுவதைக் கேட்பது போன்றவை அவரின் அந்த முடிவை மாற்றக்கூடும். பெரும்பாலும் நம்பப்படுவது போல், மனநலக் குறைபாடுகள் உள்ளவர்கள் `பைத்தியம்’ இல்லை.

உலக சுகாதார அமைப்பு 2008-ல் தற்கொலைச் செய்திகள் வெளியிடுவது தொடர்பாக ஊடகங்களுக்கான வழிகாட்டுதல்களைக் கொடுத்துள்ளது. சில காரணங்களால், இந்த வழிகாட்டுதல்களின் உண்மையான நோக்கங்களை ஊடகங்கள் பின்பற்றுவதில்லை. தற்கொலை குறித்த செய்தியை வெளியிடும் போது ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய 11 அம்சங்களை உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

தற்கொலைகளைப் பரபரப்பாக்காமல் தற்கொலைகளைத் தடுக்க மனநலப் பிரச்னைகள் குறித்து மக்களுக்குக் கற்பிப்பது அதில் மிக முக்கியமானது. பரபரப்பை ஏற்படுத்தாமல் ஒருவர் தற்கொலை என்ற வார்த்தையை தலைப்பில் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக ஒரு நபர் இறந்துவிட்டார் என்று சொல்வது இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறுகிறது.

இறந்தவரின் படத்தைப் பயன்படுத்தாமை, தற்கொலை நடந்த இடத்தைக் குறிப்பிடாமை மற்றும் தற்கொலை முடிவுக்குக் வந்ததற்கான முறையை விவரிக்காதது ஆகியவை ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய வேறு சில முக்கியமான வழிகாட்டுதல்கள்.

அந்த சோகமான தருணத்தில் உயிரிழந்தவருடைய குடும்பத்தினரின் உணர்வுகளை மதித்து, அவர்களைப் பேட்டி கொடுக்க வற்புறுத்தாமல், முன் அனுமதியின்றி படங்களை எடுக்காமல் இருப்பதும் பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, மனநல சுகாதார வசதி உள்ள ஹெல்ப்லைன் எண்கள் மற்றும் சுகாதார மையங்களை குறிப்பிடுவது தற்கொலை எண்ணங்கள் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது மிக முக்கியம். தற்கொலைக் குறிப்பின் உள்ளடக்கங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை. ஒரு தற்கொலைக் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினால் போதும்.

தற்கொலைகளில் `தொற்றுநோய்’ அல்லது `தோல்வியுற்ற முயற்சி’ போன்ற சுய-தீங்குகளை இயல்பாக்கும் சொற்றொடர்களைப் பயன்படுத்தாமல் இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது. மனநலப் பிரச்சினைகள் குறித்து சமூகத்திற்கு அறிவுறுத்துவதும், எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் ஹெல்ப்லைன் எண் உள்ளிட்டவையும் முக்கியமானவை என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

தற்கொலை காரணமாக ஒரு நபரின் பிரச்னைகளை முடித்துவிட்டது என்று மேற்கோள் காட்டுவது அல்லது அனுமானிப்பது என்பது வாழ்க்கையில் துணிச்சலான பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாத சில தற்கொலை எண்ணம் கொண்ட நபர்களுக்கு தூண்டுதலாக இருக்கலாம்.

செப்டம்பர் 2019-ல் இந்திய பிரஸ் கவுன்சில் இந்த வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல் அளித்ததுடன், மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை அடையாளம் காட்டுவதோ அல்லது அவரது படம் அல்லது காட்சிகளை முன்அனுமதியின்றி பயன்படுத்துவதோ கூடாது என ஊடகங்களைக் கேட்டுக்கொண்டது.

ஆனால், இந்திய ஊடகங்களில் தற்கொலை பற்றிய செய்திகளை வெளியிடுவது என்பது லட்சியத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது, அதே நேரத்தில் 1987ஆம் ஆண்டில் ஊடகப் பரிந்துரைகளை அமல்படுத்திய முதல் நாடான ஆஸ்திரியாவிலிருந்து வந்த அனுபவங்கள் மற்றும் பிற நாடுகளிலிருந்தும் ஊடகங்களுடன் செயலில் ஒத்துழைப்பது போன்றவை தற்கொலைகளைத் தடுக்கவும், செய்திகளின் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.

தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் அறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை விகிதம் 1,00,000 மக்களுக்கு 10.2ஆக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள், மேலும் 1 லட்சத்து 60 ஆயிரம் தற்கொலைகள் பதிவாகவில்லை. தற்கொலைகளில் பெரும்பாலானவை 14-29 வயதிற்குட்பட்டவையாகும் - இவை வாழ்க்கையின் மிகவும் முக்கியமான ஆண்டுகள்!

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் என்பது, ஊடகங்கள் உயிர்களைக் காப்பாற்ற, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்பாகும். இந்த மனநிலைக்குள் ஊடக நபரின் வாழ்க்கையும் இருக்கலாம். ஏனென்றால், ஊடகவியலாளர்களின் வாழ்க்கையும் இதில் விதிவிலக்கல்ல.

கரோனா வைரஸ், வாழ்க்கையை மன அழுத்தத்திற்குள்ளாக்கியுள்ள இந்த நேரத்தில், இந்தியா ஏற்கனவே வேலையிழப்பு, பணமதிப்பிழப்பு போன்ற பல்வேறு காரணங்களாலும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கூட, இந்த நோயின் காரணமாகவும் தற்கொலைகளைக் கண்டிருக்கிறது.

குறிப்பு: தற்கொலை தொடர்பான எண்ணங்கள் தோன்றும்போது, உரிய மனநல ஆலோசகர்களைத் தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு 24 மணிநேரமும் உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க நிபுணர்கள், ஆலோசகர்கள் தயாராக உள்ளனர். தொடர்புக்கு, சினேகா தற்கொலை தடுப்பு மைய ஆலோசனை எண் – 044 -24640050,60. மாநில உதவி எண் - 104.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.