சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள 'Renewable Power Generation Costs in 2019' எனும் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலிவாகக் கிடைக்கும் நிலக்கரியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய ஆகும் செலவை விட, காற்று, சூரிய சக்தி ஆகிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மலிவாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
50 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நிலக்கரி, மின் உற்பத்தி நிலையங்களுக்குப் பதிலாக, சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்தால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மிச்சம் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்பின் தலைமை இயக்குநர் ஃபாரான்செஸ்கோ லா கேமரா கூறுகையில், "பாரம்பரிய ஆற்றலிலிருந்து நவீன முறைக்கு மாறும் திருப்புமுனைத் தருணத்தில் நாம் உள்ளோம். நிலக்கரி கொண்டு மின்சாரம் தயாரிப்பதால் சுற்றுச்சூழலுக்கும் கேடு. பொருளாதாரத்துக்கும் கேடு.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மலிவான விலையில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இது உலக பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கும். இயற்கையான வழியில் உலகை மீட்டெடுப்பதே சிறந்தது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மருத்துவமனை விவகாரத்தில் ஆளுநரின் உத்தரவு பின்பற்றப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால்