ETV Bharat / bharat

முதியவர்கள் - சிறுவர்கள் கோயிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்!

டெல்லி: 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் முடிந்தவரை கோயிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

religious-places-in-containment-zones-to-remain-closed-those-outside-can-open-health-ministry
முயதியவர்கள் - சிறுவர்கள் கோயில்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்!
author img

By

Published : Jun 5, 2020, 8:39 AM IST

Updated : Jun 5, 2020, 12:54 PM IST

மத்திய அரசு அறிவித்த அன்லாக் - 1 தளர்வுகளின்படி வரும் ஜூன் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுகின்றன. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிபாட்டுத் தலங்களில் மக்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படாது. பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் மக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் எனும் வெப்ப அளவீட்டுக்கருவி கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவதோடு சானிடைஸர் அளிக்க வேண்டும். குறிப்பாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணித்திருக்க வேண்டும். மக்கள் அனைவரும் போதிய சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாடு நடத்த வேண்டும்

பொதுவெளிகளில் பிரசங்கம், பொதுக்கூட்ட பிராத்தனைகளை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும், பொது இடங்களில் அன்னதானம் வழங்குவது, தீர்த்தம் தெளிப்பது அறவே கூடாது. முடிந்தவரை 65 வயதுக்கு மேற்பட்டோரும் 10 வயதுக்கு உட்பட்டவர்களும் வழபாட்டுத் தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். போதிய இடைவெளியில் மத வழிபாட்டு வளாகத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தவேண்டும்.

வழிபாட்டுத் தலங்களில் குளிர்சாதனப் பெட்டி, வெண்டிலேஷன் கருவிகள் இயக்கப்படும்போது குளிர் தன்மை 24 - 30 செல்சியஸ் அளவுக்குள் இருக்க வேண்டும். ஈரப்பதம் 40 - 70 விழுக்காட்டை தாண்டக்கூடாது. இயற்கையான தூய்மையான காற்று போதிய அளவு வருவதற்கு வழிவகை செய்திருக்க வேண்டும்.

வழிபாட்டுத் தலங்களில் உள்ள தூண்களில் உள்ள சிலை வடிவிலான சிற்பங்கள், கடவுள் சிலைகள், மதம் சார்ந்த புனித புத்தகங்கள் ஆகியவற்றை மக்கள் யாரும் தொடக்கூடாது. ஒருவேளை அங்கு வந்திருந்த மக்களில் யாருக்காவது கரோனா தொற்று உறுதியானால் உடனே மருத்துவனையை தொடர்பு கொண்டு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும். பின்னர் வழிபாட்டு தலத்தின் முழு இடத்தையும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க: ஊரடங்கு விதிமீறல்: பாஜக பெண் எம்.பி.க்கு அபராதம்!

Last Updated : Jun 5, 2020, 12:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.