கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா அரசு முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுவருகிறது.
இதனிடையே, கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரி முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால், இந்தக் கூட்டத்தில் தாக்கரே பங்கேற்கவில்லை. கோஷ்யாரி, தாக்கரே ஆகியோருக்கு இடையே பனிப்போர் வெடித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இந்நிலையில், சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் கோஷ்யாரியைச் சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ராவத், "ஆளுநர், முதலமைச்சர் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்படவில்லை. அவர்களின் உறவு தந்தை-மகன் உறவு போன்றது. அவர்களின் உறவு அதேபோல் தொடரும்" என்றார்.
இதையும் படிங்க: ஆகஸ்டிற்குள் வெளிநாட்டுப் பயணிகள் விமான சேவை?