அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் புறநகர் ரயில் உள்ளிட்ட வழக்கமான பயணிகள் ரயில் சேவை வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இதேபோல், ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் பயண தேதிக்கான ரயில்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுகிறது.
எனினும் சிறப்பு ராஜதானி மற்றும் சிறப்பு அஞ்சல் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் தொடர்ந்து இயங்கும். முன்பதிவு செய்து காத்திருப்போரின் கட்டணங்கள் திருப்பி அளிக்கப்பட உள்ளது.