விண்வெளித் துறையில் தனியார் துறைக்கு ஒரு மிகப் பெரிய பங்கை வழங்கும் இந்தியாவின் சமீபத்திய முடிவு, மேலும் பல தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களை உருவாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதுவரை, இந்தியா ஏவும் செயற்கைக்கோள்களின் கட்டமைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் பரிசோதனை உள்ளிட்டவற்றை இஸ்ரோவுக்கு சொந்தமான இடத்தில் தனியார் துறை நிறுவனங்கள்தான் மேற்கொண்டு வருகின்றன. இந்த வகையில்தான், இந்தியாவின் தடங்காட்டி சேவைக்கு உதவும் ஜிசாட்-30 மற்றும் ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ ஆகிய இரண்டு செயற்கைகோள்களும் தனியார் நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டன.
39 நகரங்களில் தனது பைக் டாக்ஸி சேவையைத் தொடங்கிய ராபிடோ!
“தனியார் நிறுவனங்களுக்கு எங்களுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இஸ்ரோவால் ஒரு சூழல் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதுதான் எங்கள் முதலீடு. இப்போது அந்த தனியார் நிறுவனங்கள் தாங்களாகவே முழு தயாரிப்பையும் மேற்கொண்டு அதை இஸ்ரோவிற்கு கொண்டுவந்து சோதனை செய்ய தயாராக உள்ளனர்” என்று இஸ்ரோவின் மூத்த ஆலோசகர் தபன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவில் தனியாரின் பங்களிப்பை அதிகரிக்கும் மத்திய அரசின் சமீபத்திய முடிவு, பெரும்பாலும் கடந்த 2017ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட சட்டத்தை அடிப்படையாக கொண்டே அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இதன் மூலம் இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவூர்தியை வடிவமைக்கவும், பிறகு அதை இஸ்ரோவிடம் கொடுத்து பரிசோதனை செய்யவும் வழிவகை செய்கிறது.
தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் இஸ்ரோவுக்கு சொந்தமான கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு வகை செய்யும் கொள்கை ரீதியிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
மின்சாரத் துறைக்கு ரூ.90,000 கோடி கடன் வழங்க மத்தி அரசு முடிவு
ஆனால், உண்மை என்னவென்றால், பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு இஸ்ரோ ஏற்கனவே தனது கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக்கொள்ளும் அனுமதியை வழங்கி வருகிறது என்றார்.