கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகள் இன்றி சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிராவிலிருந்து 125 ரயில்கள் இயக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்தது.
மகாராஷ்டிராவிலிருந்து 125 ரயில்களை இயக்க இந்திய ரயில்வே தயாராக உள்ளது, ஆனால் பயணிகள், ரயில்களின் விவரம் குறித்து அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வெளியிட வேண்டும் என ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்தவ், நீங்கள் நல்ல உடல்நிலையுடன் உள்ளீர்கள் என நம்புகிறேன். நல்ல உடல்நலத்துடன் இருக்க வாழ்த்துகள். மகாராஷ்டிராவிற்கு 125 ரயில்களை அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். பயணிகளின் விவரங்கள் தயாராக உள்ளன என நீங்கள் தெரிவித்துள்ளீர்கள்.
-
More than 2.5 hours have passed but still passenger details for 125 planned trains in Maharashtra not received by GM Central Railway from Government of Maharashtra. pic.twitter.com/A4CXFpxKCZ
— Piyush Goyal (@PiyushGoyal) May 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">More than 2.5 hours have passed but still passenger details for 125 planned trains in Maharashtra not received by GM Central Railway from Government of Maharashtra. pic.twitter.com/A4CXFpxKCZ
— Piyush Goyal (@PiyushGoyal) May 24, 2020More than 2.5 hours have passed but still passenger details for 125 planned trains in Maharashtra not received by GM Central Railway from Government of Maharashtra. pic.twitter.com/A4CXFpxKCZ
— Piyush Goyal (@PiyushGoyal) May 24, 2020
ரயில்கள் எங்கிருந்து எங்கு செல்கின்றன, பயணிகளின் விவரங்கள், அவர்களின் மருத்துவ சான்றிதழ்கள் குறித்த விவரங்களை மத்திய ரயில்வே துறையின் பொது மேலாளரிடம் அடுத்து ஒரு மணி நேரத்தில் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பிறகுதான், ரயில்களின் பயண நேரம் குறித்து திட்டமிட முடியும்" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, விவரங்கள் வெளியிடாத காரணத்தால் வெளிமாநில தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில், பயணிகள் இன்றி சென்றதாகவும் கோயல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரம்: மகாராஷ்டிரா முதலமைச்சரை விமர்சிக்கும் மத்திய அமைச்சர்