டெல்லி: பட்ஜெட் முதலான ஆவணங்களை தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளில் வழங்கவேண்டும் என நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியிடம் சிதம்பரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரகலாத் ஜோஷிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 1961ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், இந்தியாவில், 1652 தாய்மொழிகள் பேசப்படுவதாகவும், அதில் 22 மொழிகளை அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் 350ஆவது பிரிவைச் சுட்டிக்காட்டி எக்னாமிக் சர்வே, மத்திய பட்ஜெட் உள்ளிட்ட ஆவணங்களை அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவை அழிப்பதே பாஜகவின் எண்ணம் - ரவிக்குமார் எம்பி பிரத்யேக பேட்டி