மகாராஷ்டிரா மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், "தேசிய விடுமுறையான அக்டோபர் 2ஆம் தேதி மூன்று படங்கள் வெளியாகி ரூ. 120 கோடிக்கும் மேல் வசூலைக் குவித்தது.
பொருளாதாரம் மந்தநிலையில் இருந்திருந்தால், எப்படி ஒரே நாளில் மூன்று படங்கள் இப்படிப்பட்ட வசூலை குவித்திருக்கும். மின்னணு உற்பத்தித் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, வணிகத்துறை ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசுக்கு எதிராக சிலர் மக்களை திசைதிருப்புகின்றனர். வேலைவாய்ப்பின்மை குறித்து தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது" என்றார்.
ஒரு நாட்டின் பொருளாதாரத்துடன் ஒரு துறையை ஒப்பிட்டு பேசியிருப்பது பொருளாதார நிபுணர்களிடையே கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
பல்வேறு தரப்பினர் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளதாக குற்றம்சாட்டிவரும் நிலையில், மத்திய அமைச்சரின் கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்பு!