ETV Bharat / bharat

பின்லாந்து இந்திய தூதர் ரவீஷ் குமார் - பின்லாந்து நாட்டிற்கான இந்தியத் தூதராக ரவீஷ் குமார் நியமனம்

இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் முன்னாள் செய்தித தொடர்பாளர் ரவீஷ் குமாரை பின்லாந்து நாட்டுக்கான இந்தியத் தூதராக நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரவீஷ் குமார்
ரவீஷ் குமார்
author img

By

Published : Jun 3, 2020, 7:25 PM IST

1995ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவைகள் அலுவலராக தேர்ச்சி பெற்ற ரவீஷ் குமார், 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி, கடந்த ஏப்ரல் மாதம்வரை இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், தற்போது பின்லாந்து நாட்டுக்கான இந்தியத் தூதராக ரவீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த பணியை அவர் ஏற்றுக்கொள்வார் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜகார்த்தாவில் உள்ள இந்தியன் மிஷனில் முதன்முதலில் தனது அலுவல் பணிகளைத் தொடங்கிய ரவீஷ் குமார், தொடர்ந்து திம்பு, லண்டன் ஆகிய நகரங்களில் பணியாற்றினார்.

ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவிற்கு முக்கியத் தோழமை நாடாகவும், கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம் உயர்ந்து வரும் நிலையில் பின்லாந்து நாட்டிற்கான இந்தியத் தூதராக ரவீஷ் குமார் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தொழில்நுட்பம், உடல்நலம், வாகனத் துறைகளைச் சேர்ந்த சுமார் 35 இந்திய நிறுவனங்கள் பின்லாந்தில் முதலீடு செய்துள்ளதும், நூற்றுக்கும் மேற்பட்ட பின்லாந்து நிறுவனங்கள் இந்தியாவில் எரிசக்தி, ஜவுளி, மின் உற்பத்தி நிலையங்கள், மின்னணு துறைகளில் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுங்கள்: கட்சித் தொண்டர்களை வலியுறுத்திய பவார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.