ETV Bharat / bharat

கரோனாவிலிருந்து குணமடைவோர் இறப்போர் விழுக்காடு 80 : 20 - லாவ் அகர்வால் - செய்திகள் இந்தியா

கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவிகிதத்தினர் குணமடைவதாகவும் 20 சதவிதத்தினர் நோய்த் தொற்றால் இறப்பதாகவும் ( 80 : 20) மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை தெரிவித்துள்ளது. 13. 6 சதவிகிதத்தினர் இதுவரை குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாவ் அகர்வால்
லாவ் அகர்வால்
author img

By

Published : Apr 17, 2020, 10:22 PM IST

கரோனா தொற்று குறித்து நாள்தோறும் மத்திய சுகாதாரத் துறை அலுவலர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து வரும் நிலையில், சுகாதாரத் துறை இணை செயலர் லாவ் அகர்வால், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கரோனா தொற்றால் பாதிக்ககப்பட்டோரின் தரவுகள் குறித்து சுகாதார அமைச்சகம் கலந்தாலோசித்ததாகவும், கரோனா தொற்றால் இறந்தவர்களின் விகிதத்தைவிட, குணமடைந்தோரின் விகிதம் அதிகம் எனவும் தெரிவித்தார்

இன்றுவரை மொத்தம் 1,749 பேர் (13.6 %) குணமடைந்துள்ளதாகத் தெரிவித்த லாவ் அகர்வால், நோய்த் தொற்றின் எண்ணிக்கை இரட்டிப்பாகக் குறைந்துள்ளதாகவும் மகிழ்ச்சித் தகவல் தெரிவித்தார். கடைசி ஏழு நாட்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அரசு எவ்வாறு நிலவரத்தைக் கையாண்டு வருகிறது என்பதை இந்தத் தரவுகள் காட்டுவதாகவும் தெரிவித்தார்.

கரோனா தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாவதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுப் பணிகளை, அரசு மேலும் தீவிரமாக்க வேண்டும் எனவும் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கரோனா தொற்றால் பாதிப்பிற்குள்ளானோரில், 80 : 20 என்கிற விகிதத்தில், 80 சதவிகிதத்தினர் குணமடைவதாகவும் 20 சதவிதத்தினர் நோய்த் தொற்றால் இறப்பதாகவும் தெரிவித்தார். எனினும், இந்த விகிதாச்சாரம் பல நாடுகளைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கேரள மாநிலத்தில் இன்று ஒருவருக்கு மட்டுமே கோவிட்-19 உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.