தொழிலதிபர் ரத்தன் டாடா வியாழக்கிழமை தனது இளைய வயதில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அமெரிக்காவில் தனது படிப்பு வாழ்க்கை குறித்து ஏற்கெனவே ஒரு புகைப்படத்த சமூக வலைதளத்தில் வெளியிட்ட ரத்தன் டாடா, தற்போது இரண்டாவதாக ஒரு புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.
அவர் பதிவிட்ட சில மணி நேரங்களில், அவரது புகைப்படம் 2.6 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றது. 3,500க்கும் மேற்பட்ட கமெண்ட்களுடன் வைரல் வெற்றி பெற்றது. இப்படத்தைப் பகிர்ந்துகொண்ட, 82 வயதான டாடா, அதை ஒரு நாள் முன்பு இடுகையிட விரும்புவதாகக் கூறினார். ஆனால், பின்னர் சமூக ஊடக விதிகளைப் பற்றியும் - குறிப்பாக #throwbackthursdays (TBT) என்ற ஹேஷ்டேக் பற்றியும் தெரியப்படுத்தப்பட்டது.
அந்தப் புகைப்படத்தோடு ரத்தன் டாடா எழுதியாவது, "நான் இதை நேற்று இடுகையிடப் போவதற்கு முன்பு "த்ரோபேக்குகள்"மற்றும் வியாழக்கிழமைகளில் அவை எவ்வாறு நிகழ்கின்றன என்பது பற்றியும் தெரிந்துகொண்டேன். "நான் மகிழ்ச்சியுடன் இந்தியாவுக்குத் திரும்புவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த நாட்களை இந்த புகைப்படத்தின் வாயிலாக திரும்பிப் பார்க்கிறேன் " என்று இன்ஸ்டாகிராமில் எழுதினார்.
தற்போது பலராலும் கவரப்பட்டு பகிரப்பட்டு வரப்படுகிறது.
இதையும் படிங்க: