ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி தொடர் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டுவந்தார்.
இதையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். அதில், சிறுமி கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். அதில், உறவினர் ஒருவரால் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டறிந்தனர்.
மேலும், "நீங்கள் (பெற்றோர்) இல்லாத சமயத்தில் அந்தச் சகோதரர் முறையான உறவினர் என்னை மிரட்டி என்னிடம் வலுக்கட்டாயமாக அத்துமீறி நடந்துகொண்டார். இதனை யாரிடமாவது கூறினால் உன்னைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்" என்று சிறுமி கூறியுள்ளார்.
பின்னர், சிறுமியின் பெற்றோர் சிந்தி முகாம் காவல் நிலையத்தில் அந்த உறவினர் மீது புகாரளித்தனர்.