மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரைச் சேர்ந்த கட்டடக் கலை பொறியியலாளரான சத்யஜித் ஷாவும், அவரது மனைவியும் இணைந்து உர்ஜா பசு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த மையம் கடந்த ஏழு ஆண்டுகளாக மாடுகளின் பாதுகாப்பு, வளர்ப்பு குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறது.
இந்த நிறுவனத்தை முதலில் சத்யஜித் ஷாவின் தந்தை இரண்டு மாடுகளுடன் தொடங்கியுள்ளார். தற்போது, 30க்கும் மேற்பட்ட மாடுகளை கவனித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி இந்த மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு மாட்டு சாணத்திலிருந்து சோப்பு, பினாயில் போன்றவற்றை தயாரிப்பது குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த ஆராய்ச்சி மையம், மாட்டு சாணத்திலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த ரங்கோலியை உருவாக்கியுள்ளது. இந்த ரங்கோலிக்கு தற்போது மார்க்கெட்டில் மவுசு அதிகரித்துள்ளது.
இது குறித்து ஷா கூறுகையில், “நாங்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக மாடுகளை வளர்த்து வருகிறோம். அதன் மூலம்தான் மாட்டின் மகிமை குறித்து உணர்ந்தோம். வெறும் மாட்டு பாலை மட்டும் விற்பனை செய்து வரும் வருமானம் விவசாயிகளுக்கு போதுமானதாக இருக்காது. அதனால், மாட்டின் கழிவு முதற்க்கொண்டு அனைத்தை காசாக்கலாம். இதன் மூலம் விவசாயிகள் நலம் பெறுவர்” என்றார்.
மேலும், இது போன்று பொருள்களை தயாரிப்பதற்கு விவசாயிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுவதாகவும், இதன் மூலம் நாட்டு மாடுகளை பாதுகாக்க முயற்சி எடுக்கப்படுவதாகவும் ஷா தெரிவித்தார்.
இதையும் படிங்க...உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் குளறுபடியா?