கல்லூரி நாள்களில் அமில வீச்சுக்கு நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி சண்டல் ஆளானார். பின் அதிலிருந்து எவ்வாறு தன்னம்பிக்கையுடன் போராடி வந்தார் என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்டது ரங்கோலி கல்லூரி ஆண்டு விழாவில் எடுத்த புகைப்படம். சில நாட்கள் கழித்து ஒருவன் என்னிடம் வந்து காதலை தெரிவித்தான். அவனது காதலை ஏற்க மறுத்தேன். இதற்கு அவன் என் முகத்தில் ஒரு லிட்டர் அமிலத்தை ஊற்றினான். பின் தனது சகோதரி கங்னாவையும் கொடூரமாகத் தாக்கினான்.
இந்த தாக்குதலால் எனக்கு 54 அறுவை சிகிச்சைகள் நடந்தன. எனது பெற்றோர் அழகான அறிவான தன்னம்பிக்கையுள்ள பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். இந்த சமூகம் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது இல்லை. என்னுடைய அழகை இழந்ததற்கு பலரும் வருந்துகின்றனர். ஆனால், உங்கள் கண் முன்பு உங்கள் உடல் உறுப்புகள் கரையும் போது, அழகைப்பற்றி கடைசியாகத்தான் எண்ணுவீர்கள்.
5 வருடங்களில் 54 அறுவை சிகிச்சைகள் செய்தும் மருத்துவர்களால் என்னுடைய காதை பழைய நிலைமைக்கு கொண்டு வரமுடியவில்லை. ஒரு கண்னை இழந்தேன். என் உடலின் பல இதர பகுதிகளில் இருந்து தோல்களை எடுத்து பலமாக காயப்பட்ட மார்பகத்தில் மருத்துவர்கள் ஒட்டினார்கள். இதனால் எனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டேன்.
இப்போதும் எனது கழுத்தை அதிகமாக நீட்டமுடியாது. ஒட்டப்பட்ட தோல்களிலிருந்து அரிப்பு ஏற்படும் போது அப்போத இறந்திருக்கலாம் என்று தோன்றும். இதை செய்தவன் சில நாட்களிலேயே பிணையில் இருந்து வெளிவந்து சுதந்திரமாக நடமாடினான். இதைப் பார்க்கும் போது மனது மிகவும் வேதனையடைந்தது. என் இளமைக்காலம் முழுவதும் மருத்துவமனையில் கழிந்தது. இதில் இருந்து வெளிப்பட உதவியது நண்பராக இருந்து என் காயங்களை கழுவிய என் கவணரும் எனக்கு ஆதரவளித்த பெற்றோரும் சகோதரியும் தான் என்று அதில் உருக்கமாக தெரிவித்திருந்தார்.
மனத்தைரியத்துடன் சவாலை எதிர்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ்வைச் சந்தித்த ரங்கோலி சண்டலை வாழ்த்தியும் ஆதரவு தெரித்தும் பலர் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'பாதுகாப்பாக பாலியல் உறவு வைத்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்' - கங்கணாவின் யோசனை