புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாருக்கு ஆதரவாக கிருஷ்ணா நகரில் முதலமைச்சர் நாராயணசாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "காமராஜ் நகர் தொகுதியின் ஆறு வார்டுகளில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தலைமையில் குழு அமைத்து வாக்கு சேகரித்துவருகிறோம்.
காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் புகார் கூறிவருகின்றனர். கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளோம்.