16ஆவது மக்களவைக்கான பதவிக்காலம் ஜூன் முதல் வாரத்தோடு முடிவடைகிறது. இதையடுத்து, 17ஆவது மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, புதிதாக வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்களின் பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வழங்கினார்.
இந்நிலையில், 16ஆவது மக்களவையை கலைத்திட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது உத்தரவிட்டுள்ளார். மேலும், இரண்டாவது முறையாக தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் நிலையில், வருகின்ற 30ஆம் மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.