சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமானது, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதன் புதிய இயக்குநராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரன் என்பவரை நியமனம் செய்து அத்துறையின் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆணையிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புதிய இயக்குநர் நியமனம் தொடர்பான செய்தியைப் பகிர்ந்துள்ளதோடு, தமிழ் மொழியை மேம்படுத்துவதில் தங்களின் ஈடுபட்டினை இது உணர்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது ட்வீட்டில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது வரிசையில் நடிகர் ரஜினிகாந்தையும் ரமேஷ் பொக்ரியால் குறிப்பிட்டுள்ளார்.