உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து, முஸ்லீம் அமைப்புகள் உரிமை கோரி வருகின்றனர். இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்துவருகிறது. தற்போது அயோத்தி வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் அக்டோபர் 18ஆம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதிலிருந்தே அயோத்தி வழக்கு தங்களுக்கு சாதகமாகதான் வரப்போகிறது என சில இந்து அமைப்புகளின் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்ரபாணி,”மிக விரைவிலேயே அயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படும். இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபின், வெறும் கற்களால் ராமர் கோயிலைக் கட்டாமல் தங்கத்தைக் கொண்டு கோயில் கட்ட வேண்டும்” என்றார்.