பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை விசாரிக்கும் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் அவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராம் விலாஸ் வேதாந்தியின் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டது.
சிறப்பு நீதிபதி எஸ்.கே. யாதவ் முன்னிலையில் ஆஜரான அவர், சிஆர்பிசி பிரிவு 313இன் கீழ் தனது அறிக்கையை பதிவு செய்தார்.
இதன்பின்பு தான் பதிவு செய்த அறிக்கை குறித்து ஈடிவி பாரத்திடம் அவர் பேசினார். "சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதிக்கான எந்த எச்சமும் இல்லை. கோயிலின் எச்சங்களை மட்டும்தான் இடித்தேன். கோயிலை இடித்ததற்கு மரணதண்டனை விதித்தால்கூட அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்" இவ்வாறு தனது அறிக்கையில் பதிவு செய்ததாகத் தெரிவித்தார்.
மேலும், எவ்வளவு பிரச்னை ஏற்பட்டாலும் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர்கோயில் கட்டப்படும் என்றார்.
1992ஆம் ஆண்டு கரசேவர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 32 பேர் மட்டுமே தற்போது உயிருடன் இருக்கின்றனர்.