நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி, மிக முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் தான் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நாளில்தான், அயோத்தி ராமர் கோயிலுக்கும் அடிக்கல் நாட்டப்படவுள்ளது. நூற்றாண்டு கால பிரச்னைக்கு முடிவு காணப்பட்டதாக நம்பப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயிலின் பூமி பூஜை
500 ஆண்டு கால சச்சரவு, ஆகஸ்ட் 5ஆம் தேதி முடிவுக்கு கொண்டு வரப்படும் என நம்பப்படுகிறது. இந்த விவகாரத்தால் நாட்டில் பல வன்முறைகள், பிளவு ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ள பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார்.
வேத முறையின் படி, மதம் சார்ந்த சடங்கு நடத்துவதற்கான தேதியும், நேரமும் தீர்மானிக்கப்பட்ட போதிலும், ஆகஸ்ட் 5ஆம் தேதியை பாஜக தேர்வு செய்வதற்கு வேறு சில முக்கிய நிகழ்வுகளும், காரணங்களும் உண்டு.
அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கம்
அரசியலமைப்பு பிரிவு 370ஐை நீக்கி, ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி நரேந்திர மோடி அரசு, வரலாற்றில் முக்கிய முடிவு ஒன்றை எடுத்தது. மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு நாடு ஒரு அரசியலமைப்பு என்ற கனவை பாஜக அடைந்தது.
ஆகஸ்ட் 5ஆம் தேதி ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என தெரியவில்லை. அது தற்செயலாகக் கூட இருக்கலாம். நாட்டின் மக்களிடமிருந்து ஆதரவு பெற்றதால், அத்தேதியை புனிதமாகக் கூட பாஜக கருதலாம்.
முகல்சாராய் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம்
ஆசியாவின் மிகப் பெரிய ரயில்வே ஓடுதளத்தை கொண்ட ரயில்வே நிலையம் உத்தரப் பிரதேசம், சந்தவுலி மாவட்டத்தில் உள்ளது. முகல்சாராய் ரயில் நிலையம் என்ற அந்நிலையத்தின் பெயர் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா என, ஆகஸ்ட் 5ஆம் தேதிதான் மாற்றம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பாஜக பக்கம் சாயும் திமுக வி.ஐ.பி தொகுதி எம்எல்ஏ!