ETV Bharat / bharat

ராமர் கோயில் விவகாரம்: 50 ஆண்டுகால பயணத்திற்கு 40 நாள்களில் தீர்ப்பு! - Ram Mandir

பாஜகவின் கர்ஜிக்கும் தேரை எவ்வாறு நிறுத்துவது என்பது தெரியாமல் காங்கிரஸ் தலைமை இருந்தது. செப்டம்பர் 1990இல் சோம்நாத் முதல் அயோத்தி வரை அத்வானியின் ரத யாத்திரை அதிக கூட்டத்தை ஈர்த்து இந்து அலையை நாடு முழுவதும் பரப்பியது.

ராமர் கோயில்
ராமர் கோயில்
author img

By

Published : Jul 28, 2020, 1:55 AM IST

Updated : Aug 1, 2020, 3:17 PM IST

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும்போது, ​​50 ஆண்டுகளுக்கும் மேலான, மிகவும் சிக்கலான மற்றும் வன்முறை இனவாத பிரச்னைகளுக்கும் முடிவு கட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமர் கோயில் கட்டுவது என்பது எப்போதுமே சங் பரிவாரின் மனதில் மிக நெருக்கமாக இருக்கும். இது சமீபத்திய அனைத்து தேர்தல் அறிக்கைகளிலும் முக்கியமாக காணப்பட்டது. இருப்பினும், அவர்கள் அந்த நோக்கத்தை எவ்வாறு அடைவது என்பது குறித்து எந்த ஒரு திட்டமும் இல்லாமல் இருந்தனர். பெரும்பாலான முயற்சிகள் பேச்சுவார்த்தைகளாகவே இருந்தன. அவற்றில் ஒரு டஜன் கூட்டங்கள் இடைக்காலத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமல் முடிவுற்றது.

இறுதித் தீர்ப்பிற்கான களத்தை அமைப்பதற்கு இரண்டாவது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க ஒரு நரேந்திர மோடி தேவைப்பட்டார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி செயல்பட மோடி முடிவு செய்தார். தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, பல ஆண்டுகளாக முடிக்க முடியாத வழக்கை ஒருமனதாக முடிவு செய்ய 40 நாட்கள் ஆனது.

1980களின் முற்பகுதியில், ராமர் கோயில் / பாபர் மசூதி பிரச்னையை இந்துத்துவா அடிப்படையாக சங் பரிவார் தேர்ந்தெடுத்தது. விஸ்வ இந்து பரிஷத் (VHP) 1984 ஜனவரியில், அயோத்தியில் சரயு ஆற்றின் கரையில் சங் பரிவார் அமைப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில் திறந்து விடு திறந்து விடு, ஜன்மபூமியை திறந்து விடு என்று முழக்கமிடப்பட்டது.

இந்த வி.எச்.பி கிளர்ச்சியினால் பாஜக பயனடைந்தது. பிப்ரவரி 1986இல் பைசாபாத் நீதிமன்ற உத்தரவின்பேரில் ராம் ஜன்மபூமி திறக்கப்பட்டதும், இந்துக்களுக்கு பிரார்த்தனை செய்யும் உரிமையை வி.எச்.பியின் கிளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியது. ஆகஸ்ட் 1989-ல், ராம் ஜன்மபூமி / பாப்ரி மசூதி வழக்கில் யாருக்கு உரிமை என்ற முக்கியமான வழக்கு விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்றம் மேற்கொண்டது.

இந்த வழக்கின் வரலாற்றில் 1989 நவம்பரில் பொதுத் தேர்தல்களுக்கு சற்று முன்னர் ஒரு முக்கியமான திருப்பம் ஏற்பட்டது, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அரசாங்கம் சர்ச்சைக்குரிய இடத்திற்கு அருகில் பூஜை செய்ய வி.எச்.பி.க்கு அனுமதி வழங்கியது. வி.எச்.பி கோயில் பிரச்னையை வைத்து ஒரு பீதியை உருவாக்கத் தொடங்கியது. நவம்பர் 1990இல், அரசாங்கத் தடையை மீறி லட்சக்கணக்கான சங் பரிவார் ஆர்வலர்கள் அயோத்திக்கு வந்தனர். அவர்கள் சர்ச்சைக்குரிய இடத்தை நோக்கி ஊர்வலமாக செல்லத் தொடங்கியபோது, ​​முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ், ஊர்வலம் வந்த கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். அந்த துப்பாக்கிச் சூட்டில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதன் மூலம் 1991ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு கிடைத்த ஆதாயங்கள் குறிப்பிடத்தக்கவை, அந்த தேர்தலில் அது 45 இடங்களை வென்றது, ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 57 இடங்களிலிருந்து 193 இடங்களைப் பெற்றது.

பாஜகவின் வளர்ச்சியை எவ்வாறு தடுப்பது என்பது தெரியாமல் காங்கிரஸ் தலைமை இருந்தது. செப்டம்பர் 1990இல் சோம்நாத் முதல் அயோத்தி வரை அத்வானியின் ரத யாத்திரை அதிக கூட்டத்தை ஈர்த்து ஒரு இந்து அலையை உருவாக்கியது. பூட்டுகளைத் திறந்து விட்டது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய வழக்குகளின் பல முக்கியமான திருப்புமுனைகளில் பெரும்பாலானவை காங்கிரஸ் ஆட்சியில் நடந்திருந்தாலும், சங் பரிவார் எப்போதுமே நிலைமையை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் குறியாக இருந்தது.

பிரதமர் வி.பி. சிங், சங் பரிவார் ஆதரவைக் குறைக்க குறைந்தபட்சம் ஒரு உறுதியான திட்டத்தைக் கொண்டிருந்தார். ஆகஸ்ட் 7, 1990 அன்று, வி.பி. சிங் அரசாங்கம் மண்டல் ஆணையத்தின் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு வேலைகள் வழங்கப்படும் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்தப்போவதாக அறிவித்தது, மண்டல் திட்டம் ஓரளவிற்கு பயன்பட்டாலும், அதனால் பாஜகவை அடக்க முடியவில்லை.

இறுதியாக 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டது. பல பத்திரிகையாளர்கள் கர சேவகர்களால் தாக்கப்பட்டனர், அவர்களின் டேப் ரெக்கார்டர்கள் மற்றும் கேமராக்கள் பறிக்கப்பட்டன, நாங்கள் தரையில் உட்கார வைக்கப்பட்டோம், சுமார் நான்கு மணி நேரத்தில் பெரிய கட்டடத்தை தரைமட்டமாக்கும் வரை அத்துமீறல் தொடர்ந்தது.

1993இல் பி.வி. நரசிம்மராவ், சர்ச்சைக்குரிய இடத்திற்கு அருகில் 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார். 1992இல் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் சர்ச்சைக்குரிய இடம் முற்றிலுமாக வழங்கப்பட்டது. லால் கிருஷ்ண அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் மற்றும் உமா பாரதி உள்ளிட்ட 68 சங் பரிவார் தலைவர்கள் மீது குற்றஞ்சாட்டி ஜூன் 2009இல் லிபரன் கமிஷன் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

செப்டம்பர் 30, 2010 அன்று, சர்ச்சைக்குரிய இடத்தை இருதரப்புக்கும் பகிர்ந்தளிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் பெரும்பான்மை தீர்ப்பை வழங்கியபோது நாடு தழுவிய மற்றொரு குழப்பம் ஏற்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் 2011 மே மாதம் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தியது. 2019 ஜனவரி மாதம் இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கி சமரசம் செய்ய பரிந்துரைத்தது.

சமரச முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர், 2019 ஆகஸ்ட் 6 முதல் தினமும் விசாரணையை நடத்தி, வாக்குறுதியளித்தபடி 40ஆவது நாளில் தீர்ப்பை வழங்கியது. அயோத்தியில் புதிய ராம் கோயில் கட்டுவதற்கு 2020 ஆகஸ்ட் 5ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு அதை மேற்பார்வையிட ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அயோத்தி விவகாரம்: நடந்தது என்ன?

Last Updated : Aug 1, 2020, 3:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.