ETV Bharat / bharat

அயோத்தி பூமிபூஜை : நேரம் கணித்த வேத விற்பன்னர் விஜயேந்திர சர்மாவின் பிரத்யேக பேட்டி ! - ஈ டி.வி பாரத்தின் பிரத்யேகப் பேட்டி

பெங்களூரு : அயோத்தி ஸ்ரீராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவிற்கான சுப முகூர்ந்த நேரத்தை கணித்து தந்த வேத விற்பன்னர் சாவந்த் என்.ஆர் விஜயேந்திர சர்மாவின் பிரத்யேக பேட்டி.

அயோத்தி பூமிபூஜை : நேரம் கணித்த வேத விற்பன்னர் விஜயேந்திர சர்மாவின் பிரத்யேகப் பேட்டி !

author img

By

Published : Jul 29, 2020, 6:15 AM IST

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீராமர் ஜென்ம பூமி கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை தீவிரமாக செய்துவருகிறது. ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ள அடிக்கல் நாட்டு விழாவிற்கான சுப முகூர்த்த நேரத்தை கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த வேத விற்பன்னர் சாவந்த் என்.ஆர் விஜயேந்திர சர்மா கணித்து தந்துள்ளார்.

முன்னாள் பிரதமர்களான மொரார்ஜி தேசாய், பி.வி. நரசிம்மராவ், அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற இந்தியாவின் பல அரசியல் தலைவர்களின் பதவியேற்பு விழாக்களுக்கு நல்ல நேரத்தை கணித்து தந்தவர் சர்மா என்பது கவனிக்கத்தக்கது. பெலகாவியில் உள்ள ராகவேந்திரர் கோயிலின் நவபிருந்தாவனத்தில் வசித்துவருகிற சாவந்த் விஜயேந்திர சர்மா, நமது ஈடிவி பாரத்துக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் விழா குறித்து பேசிய அவர், "அயோத்தி ராமர் கோயிலின் பூமி பூஜைக்காக ஜூலை 29, ஜூலை 31, ஆகஸ்ட் 3 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகியவை நான்கு சுப முகூர்த்த நாள்களை நான் தேர்வு செய்து தந்தேன். அவற்றில் மிகச் சிறந்த நாளான ஆகஸ்ட் 5ஆம் தேதியை பூமி பூஜைக்கு ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தேர்வு செய்துள்ளது. ஸ்ரீராம் ஜென்ம பூமியின் நம்பிக்கைக்குரிய புனேவைச் சேர்ந்த கோவிந்த் தேவகிரி மகாராஜின் வேண்டுகோளை ஏற்று நான்கு முகூர்த்த நாள்களை கணித்து கொடுத்துள்ளேன்.

பத்ரா எனும் வெற்றிகரமான செயலுக்கு பெரிதும் பொருந்தும் முகூர்த்த நாள் என்பதால் ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் ராம் கோயிலுக்கான அஸ்திவாரமிட தேர்வு செய்துள்ளனர். ஸ்ரீராம ஜென்ம பூமி வளாகத்தில் நடைபெறும் பூமி பூஜை விழாவுக்கு முன், மூன்று நாள் (ஆகஸ்ட் 2 - 4 வரை) வேத மந்திரங்கள் முழங்க, சடங்குகள் நடைபெறும். பூமி பூஜையின் போது, கோயில் கருவறை அமையும் பகுதியில், 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல்லை அடிக்கல்லாக நாட்டப்படும்.

ஸ்ரீ ராமரின் ஜென்ம பூமி தீர்த்த கோயிலின் கட்டுமானம் தொடங்கும் இந்த புனித விழாவை உலகமே கொண்டாடும். ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை, தீபாவளி போல் மக்கள் கொண்டாட வேண்டும். உலகமுழுவதும் அனைத்து கோயில்களிலும் அகல் விளக்குகள் ஏற்றப்படும். கோயில்களில், சிறப்பு பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் மகிழ்ச்சி அளிக்கின்றன" என தெரிவித்தார்.

அயோத்தி முழுவதும் ஆங்காங்கே ராட்சத திரைகள் அமைக்கப்பட்டு, பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பொது மக்கள், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து பார்க்கலாம் என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.