நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கி அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தொடரை காலை ஒன்பது மணி முதல் மதியம் ஒரு மணி வரை ஒரு பிரிவாகவும், மதியம் மூன்று மணி முதல் இரவு ஏழு மணி வரை மற்றொரு பிரிவாகவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வரும் 13ஆம் தேதி மாநிலங்களவையின் வணிக குழு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை துணைத் தலைவருக்கான தேர்தல், முதல் நாள் சபையின் நிகழ்ச்சி நிரலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு ஜனதா தளம் (எம்) நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.