மாநிலங்களவையின் 250ஆவது கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டின் வளர்ச்சி பயணத்தை மாநிலங்களவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
பல வரலாற்று தருணங்களை இந்த அவை கண்டுள்ளது. வரலாறையும் படைத்துள்ளது. தொலைநோக்கு பார்வையுடன் மாநிலங்களவை செயல்படுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையை மாநிலங்களவை பறைசாற்றுகிறது. கூட்டாட்சி தத்துவத்திற்கு மாநிலங்களவை முக்கியத்துவம் தருகிறது.
தேர்தல் அரசியலில் இருந்து விலகி நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை தருபவர்களுக்கு மாநிலங்களவை வாய்ப்பளிக்கிறது. இந்த அவையின் 250ஆவது கூட்டத்தொடர் ஒரு வரலாற்று பயணத்தை குறிக்கிறது. மக்களவை, மாநிலங்களவை என உருவாக்கி நாட்டின் ஜனநாயகத்தை அரசியலமைப்பை நிறுவியவர்கள் வலுப்படுத்தியுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: 'ஃபாத்திமா தற்கொலையில் யாரைப் பாதுகாக்க முயற்சி நடக்கிறது' - மக்களவையில் கனிமொழி எம்.பி., கேள்வி