ETV Bharat / bharat

ஏழை மக்களுக்கு இலவச முகக்கவசங்கள் வழங்க வேண்டும்: சிபிஐ மாநிலங்களவை உறுப்பினர் கோரிக்கை! - இலவச முகக்கவசங்கள்

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்து வருவதால், ஏழை மக்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்க வேண்டும் என சிபிஐ மாநிலங்களவை உறுப்பினர் பினோய் விசம் கோரிக்கை விடுத்துள்ளார்.

rajya-sabha-cpi-mp-demands-free-mask-distribution-to-poor

author img

By

Published : Sep 21, 2020, 3:39 PM IST

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் எட்டாவது நாளாக நடந்து வருகிறது. இந்த நடந்த மாநிலங்களவைக் கூட்டத்தின் பூஜ்ய நேரத்தின் போது, கேரள சிபிஐ உறுப்பினர் பினோய் விசம் பேசினார். அதில், '' கரோனா வைரசால் இந்தியாவில் ஒரு நாளில் மட்டும் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் ஆயிரத்து 130 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54 லட்சத்து 87 ஆயிரத்து 580 பேர் வரை கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

நாட்டு மக்களில் பலரும் முகக்கவசங்கள் வாங்க முடியாத நிலையில்தான் இருக்கின்றனர். அதனால் ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பாக இலவசமாக முகக்கவசங்கள் வழங்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்தார்.

கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விவசாயிகளிடம் பொய் கூறுவதை மோடி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்' - ப. சிதம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.