டெல்லி வன்முறை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுவந்ததால் மாநிலங்களவை நேற்று நான்காவது நாளாக முடங்கியது.
இன்று ஐந்தாவது நாள், மாநிலங்களவை தொடங்கியது முதலே டெல்லி வன்முறை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, "சபையை திறம்பட மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் நோக்கில் அர்த்தமுள்ள வகையில் நடத்த அரசும் எதிர்க்கட்சிகளும் விவாதித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். அப்போது தான் சபையை என்னால் திறம்பட நடத்த முடியும்" என்றார்.
அதைத்தொடர்ந்து, வரும் மார்ச் 11ஆம் தேதி காலை 11 மணி வரை மாநிலங்களவையை வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார்.
முன்னதாக, இன்று காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் குலாம் நபி ஆசாத் மற்றும் ஆனந்த் ஷர்மா ஆகியோர், டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் உரிய விசாரணை நடத்த ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும், இது குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாநிலங்களவையில் விதி 267இன் கீழ் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தனர்.
இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்!