பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஷாங்காய் கூட்டுறவு நாடுகள் சார்பில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அதில் பங்கேற்று பல்வேறு நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், சீனாவின் பாதுகாப்பு அமைச்சருடன் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாஸ்கோவில் இந்தக்கூட்டம் முடிவடைந்த நிலையில், இந்தியா திரும்புவதாக இருந்த ராஜ்நாத் சிங் திடீர் முடிவாக ஈரான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். ஈரான் சென்று, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமர் ஹடாமியை சந்தித்து பேசவுள்ளதாக இந்தப் பயணம் குறித்து ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்தியா-சீனா இடையே எல்லைத் தொடர்பான மோதல் கடந்த சில மாதங்களாகத் தீவிரமடைந்துள்ளது. இந்தச் சூழலில் ராஜ்நாத் சிங்கின் ஈரான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சாபர் துறைமுக ஒப்பந்தம், கச்சா எண்ணெய் இறக்குமதி உள்ளிட்ட விவகாரங்களும் இந்தச் சந்திப்பின்போது பேசப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா சோதனையை சாதனையாக மாற்றிய மத்திய அரசு - பாஜக தேசியத் தலைவர் பெருமிதம்