ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கார்கில் மாவட்டத்தில் 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிக்க முயற்சித்தனர். இதனை 'ஆப்ரேஷன் விஜய்' மூலம் தடுத்து நிறுத்தி ஆக்கிரமிப்பு பகுதிகளை இந்திய பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.
இந்தக் கார்கில் போர் நடந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு டெல்லியில் கார்கில் போர் நினைவிடத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். இதனை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்ட இரண்டு புதிய பாலங்களை ராஜ்நாத் சிங் இன்று திறக்க உள்ளார். முன்னதாக ஜூலை 14ஆம் தேதி கார்கில் வெற்றி ஜோதியை ராஜ்நாத் சிங் ஏற்றிவைத்தது குறிப்பிடத்தக்கது.