ETV Bharat / bharat

ராணுவ வீரர்களின் தயார் நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆய்வு

author img

By

Published : Jul 17, 2020, 11:31 AM IST

டெல்லி: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லே பகுதியில் உள்ள ராணுவ வீரர்களின் தயார் நிலைக் குறித்து இன்று ஆய்வு செய்தார்.

Rajnath
Rajnath

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லே எல்லைக்குப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாதுகாப்புப் படை வீரர்களுடன் கலந்துரையாடிய ராஜ்நாத் சிங், அங்கு வீரர்களின் தயார் நிலைக் குறித்து ஆய்வு செய்தார். வீரர்களின் துப்பாக்கியைக் கையில் வாங்கி அதன் செயல்பாடுகளை கேட்டறிந்த அமைச்சர், அவர்களின் பயிற்சி முறைகளையும் பார்வையிட்டார்.

இந்த பயணத்தைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதிக்கு நாளை (ஜூலை 18) பயணம் செய்கிறார். கடந்த சில மாதங்களாகவே எல்லைப் பகுதியில் சலசலப்பு நிலவிவரும் நிலையில் அமைச்சரின் தற்போதைய பயணம் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. லடாக்கின் லே எல்லைப் பகுதியில் சீனா கடந்த மாதம் அத்துமீறல் மேற்கொண்டதை அடுத்து அங்கு மோதல் வெடித்தது. பின்னர் அது பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர் மோதல் நிலவிவருகிறது. அண்மையில் காஷ்மீரில் பாஜக பிரமுகர்கள் சிலர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட நிலையில் ராஜ்நாத் சிங்கின் இந்த காஷ்மீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்தப் பயணத்தின்போது முப்படைத் தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி நரவனே ஆகியோரும் உடன் செல்கின்றனர்.

இதையும் படிங்க: 1998 என்கவுன்ட்டரில் விகாஸ் துபே நூலிழையில் உயிர்தப்பினார் - காவலர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.