மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றன. இதில் ஐந்து கட்டங்களுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ராஜீவ் காந்தி ஒரு நம்பர் ஓன் ஊழல்வாதி என விமர்சித்தார்.
தொடர்ந்து, நேற்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனது கால் டாக்சியை போல் பயன்படுத்தினார் என, குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் மூத்தத் தலைலர் அகமது பட்டேல், "மறைந்த பிரதமரை விமர்சிப்பது கோழைத்தனத்தின் உச்சம். பாஜக ஆதரவுடன் ஆட்சி செய்துவந்த முன்னாள் பிரதமர் வி.பி சிங் தலைமையிலான மத்திய அரசு, ராஜீவ் காந்திக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க மறுப்பு தெரிவித்ததே அவர் கொல்லப்பட்டதற்கான காரணம்", என குறிப்பிட்டுள்ளார்.