ETV Bharat / bharat

எழுவர் விடுதலை: ஆளுநரிடம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு ஆளுநரிடம் கேட்டு இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஏழு தமிழர் விடுதலை உச்சநீதிமன்றம்  ஏழு தமிழர் விடுதலை வழக்கு விபரம்  seven tamils case  rajive murder case
ஏழு தமிழர் விடுதலை வழக்கு
author img

By

Published : Feb 11, 2020, 8:22 PM IST

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள எழுவரையும் விடுதலை செய்வதாகத் தீர்மானம் ஒன்றை தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியிருந்தது. அதனை தமிழ்நாடு அரசு, ஆளுநராகவுள்ள பன்வாரிலால் புரோஹித்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆனால், இதுநாள் வரையில் அவர் அந்த தீர்மானத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தீர்மானம் மீது ஆளுநர் என்ன நடவடிக்கை எடுத்தார், இவ்வளவு காலம் அந்த தீர்மானத்தின் மீது பதில் சொல்வதில் என்ன தாமதம் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆளுநருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும்; தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள தீர்மானத்தின் மீது ஆளுநர் என்ன முடிவு எடுத்துள்ளார் என்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆளுநரிடம் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக இரண்டு வாரங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏழு பேர் விடுதலை... ஆளுநர் அலுவலகம் கண்ணாமூச்சி விளையாடுகின்றன - பாலகிருஷ்ணன்

Intro:Body:

Rajiv Gandhi assasination case: SC asks TN government to discuss with governor over his decision on cabinet's resolution demanding the release of 7 convicts

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

சிறையிலுள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் பேசி அறிக்கை தாக்கல் செய்க

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

புது டெல்லி:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரிடம் தான் பேச வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசை செவ்வாய்க்கிழமையன்று வழியுறுத்தியது.

எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அதனை தமிழக ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோஹித்திற்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் என்ன நடவடிக்கை எடுத்தார். இவ்வளவு காலம் அந்த தீர்மானத்தின் மீது பதில் சொல்வதில் என்ன தாமதம் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரனைக்கு வந்தது.

அப்போது, ஆளுநருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது. தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் என்ன முடிவை எடுத்துள்ளார் என்பது தொடர்பாக தமிழக அரசு ஆளுநரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபட் பயாஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் 25 ஆண்டுக்கு மேலாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.