உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூர் என்கவுண்டர் வழக்கில் காவல் துறையை சேர்ந்த எட்டு பேர் ரவுடிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தில், தார்மீக ரீதியில் பொறுப்பேற்று அம்மாநில முதலமைச்சர் யோதி ஆதித்யநாத் பதவி விலக வேணடும் என சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பார் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் காவல் துறையினர், அரசியல்வாதிகள் என பல முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், இந்த வழக்கினை மேற்படி விசாரணை செய்ய சிபிஜயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காவல் துறையினரை கொலை செய்த ரவுடி கும்பலுக்கு, யோகி ஆதித்யநாத் அரசு ஆதரவு அளித்ததாகக் கூறும் வகையில், பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் தலைவர்களின் பெயரை அந்த கும்பல் வெளிப்படையாகக் கூறும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிய பின்பும், பாஜக அரசு இந்த விவகாரத்தில் அமைதி காப்பது ஏன் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: கான்பூர் என்கவுன்டர்: துபேவின் பைனான்சியர் கைது