ETV Bharat / bharat

ராஜஸ்தான் அரசியலில் என்ன நடக்கிறது?; விசாரணை வளையத்துக்குள் பாஜக! - குதிரைபேரம்

ஹைதராபாத்: ராஜஸ்தானில் மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த சிறு பார்வை...

Rajasthan Political Drama Rajasthan ராஜஸ்தான் அரசியல் அசோக் கெலாட் ராஜஸ்தான் பாஜக காங்கிரஸ் குதிரைபேரம் மாநிலங்களவை தேர்தல்

author img

By

Published : Jul 12, 2020, 8:07 AM IST

மத்தியிலும், சில மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெற்றுவரும் நிலையிலும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அத்திபூத்தார்போல் மலர்ந்தது. மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத்தும், ராஜஸ்தானில் அசோக் கெலாட்டும் முதலமைச்சராக மேலிடத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், உள்கட்சிப் பிரச்னை, பாஜகவின் குடைச்சல் காரணமாக மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. மீண்டும் முதலமைச்சரானார் பாஜகவின் சிவ்ராஜ் சிங் சவுகான்.

ஆட்சி மாற்றம்

அப்போது கலகக் குரல் ஒன்று சத்தமாக ஒலித்தது. அடுத்து ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் என்பதே அந்தக் குரல். இந்தக் கலகங்களுக்கு மத்தியில் பாஜகவின் குதிரை பேரம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகின்றனர். ஏனெனில், மத்தியப் பிரதேசத்துக்கு முன்னதாக அவர்கள் கர்நாடகத்தில் ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்திருந்தனர். இந்தச் சத்தம் சிறிது காலம் ஓய்ந்திருந்த நிலையில், அண்மையில் நடந்த மாநிலங்களவை தேர்தல்களின்போது மீண்டு(ம்) ஒலிக்க ஆரம்பித்தது.

2 ஆயிரம் கோடி ரூபாய் பேரம்

ஒரு வேட்பாளர் வெற்றிபெற தகுதியுள்ள நிலையில், இரண்டு வேட்பாளர்களை பாஜக நிறுத்தியதே, குழப்பத்துக்குக் காரணம். இந்தத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு தோல்வியைக் கிடைத்த போதிலும், அடுத்த சில வாரங்களில் மீண்டும் குதிரை பேரத்தின் சத்தம் கேட்க ஆரம்பித்தது.

பதறிய காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட், வெளிப்படையாகவே செய்தியாளர்களைத் திரட்டி பேட்டியளித்தார். ”மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்க இரண்டாயிரம் கோடி வரை பேரம் பேசப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டை முன்வைத்தார்.

வாஜ்பாய் பாஜக அல்ல

அதுமட்டுமா? 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்துள்ள பாஜக, வாஜ்பாயின் பாஜக அல்ல, இது நரேந்திர மோடியின் பாஜக. மிக மிக மோசமாகச் செயல்படுகின்றனர். மத பெருமையைப் பேசி, மக்களிடையே பிரிவினையை உருவாக்குகின்றனர்” என்றெல்லாம் தனது ஆதங்கத்தைக் கொட்டினார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக வெள்ளிக்கிழமை (ஜூலை10) மாநில சட்டப்பேரவைக்குள் எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பாஜக உறுப்பினர்கள் நுழைந்து முதலமைச்சர் அசோக் கெலாட் மாநிலங்களவை தேர்தலின்போது குதிரை பேரத்தில் ஈடுபட்டார் என்று கூறி அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டுவந்தனர்.

காங்கிரஸ் மீண்டும் புகார்

சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானத்தை பாஜக கொண்டுவந்த நிலையில், அன்றைய தினம் மாலை, ராஜஸ்தான் மாநில சிறப்பு இயக்கக் குழு மற்றும் ஊழல் எதிர்ப்புக் குழுவினர் (SOG-ATS) வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநில சிறப்பு இயக்கக் குழுவுக்கு கடிதம் எழுத காங்கிரஸ் தயாராகிவருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவரும், அரசின் தலைமை கொறடாவுமான மகேஷ் ஜோஷி, ஈடிவி பாரத்துடன் பேசுகையில், ”பாஜகவின் நடவடிக்கை மோசமானதாக இருக்கிறது. பாஜகவின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட செயல்களுக்காக, அக்கட்சி மீது மற்றொரு புகார் அளிக்க உள்ளோம்” என்றார்.

முதல் தகவல் அறிக்கை பதிவு

மாநில சிறப்பு இயக்கக் குழு மற்றும் ஊழல் எதிர்ப்பு குழு கூடுதல் பொது இயக்குநர் அசோக் குமார் ரதோர் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “இந்த வழக்கில் இரண்டு மொபைல் எண்கள் கிடைத்துள்ளன. அதனடிப்படையில் எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டுள்ளது. பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. விசாரணையும் தொடர்கிறது” என்றார்.

மேலும் இந்த விஷயத்தில், “முதலமைச்சர் அசோக் கெலாட் உள்பட அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் அறிக்கைகளும் பதிவுசெய்யப்படும்” என்றார்.

26 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டு அறிக்கை

இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்ட பின்னர், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை இரவு 26 பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்களை வாங்க பாஜக முயலுவதாகவும், காங்கிரஸ் அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் தலைமை கொறடா, துணை கொறடா உள்பட 26 சட்டப்பேரவை உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்நிலையில், சனிக்கிழமை எஃப்.ஐ.ஆர். நகல் ஊடகங்களில் வெளியானது. இதற்கிடையில், சனிக்கிழமை காலை உதய்பூரைச் சேர்ந்த அசோக் சிங் சவுகான், அஜ்மீரின் பீவாரைச் சேர்ந்த பாரத் பாய் ஆகியோரை குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்து விசாரித்தனர்.

கால அவகாசம்

இதற்கிடையில், இந்த வழக்கில் விசாரணையைத் தொடர நேரம் கோரி SOG-ATS இயக்குநர், முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், கூடுதல் துணை இயக்குநர் அறிக்கையைப் பதிவுசெய்ய கால அவகாசம் வேண்டும் எனக் கூறியுள்ளார்.

முதலமைச்சர் பேட்டி

இந்நிலையில், செய்தியாளர்கள் முன்னிலையில் தோன்றிய முதலமைச்சர் அசோக் கெலாட், “ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது. காங்கிரஸ் அரசாங்கம் ஐந்து ஆண்டு காலத்தைப் பூர்த்தி செய்யும்.

நாங்கள் அடுத்த தேர்தலுக்கு தயாராகிவருகிறோம். மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையிலும் பாஜக ஆட்சி மாற்றத்தில் கவனம் செலுத்துகிறது” என்று குற்றஞ்சாட்டினார்.

வழக்குப்பதிவு

இந்த குதிரை பேர விவகாரத்தில் சுயேச்சை எம்எல்ஏக்களான சுரேஷ் தங், குஷ்விர் சிங், ஓம்பிரகாஷ் ஹூட்லா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) வட்டாரங்கள், இந்த எம்எல்ஏக்கள் கோடிக்கணக்கிலான ரூபாய்க்கு விலை போனதாக தெரிவிக்கின்றன. இதுகுறித்து அரசு தலைமை கொறடா மகேஷ் ஜோஷி கூறுகையில், “இந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கைகள் தெளிவாக உள்ளன. உண்மையை மக்களுக்குத் தெரியபடுத்த வேண்டும்” என்றார்.

பாஜக மறுப்பு

பாஜக மாநில தலைவர் சதீஷ் பூனியா, “இங்கு நடக்கும் அனைத்தும் அவர்களின் அரசியல் நாடகம். இதுபோன்ற சம்பவங்களுக்கு பாஜக எம்எல்ஏக்கள் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள். இது அடிப்படை ஆதாரமற்றது. பகுத்தறிவற்றது. கெலாட் அரசாங்கம் தனது பலவீனத்தை மறைக்க முயல்கிறது” என்றார்.

துணை கொறடா மகேந்திர சௌத்ரி, “இந்த விவகாரத்தில் பாஜகவின் திட்டம் பலிக்காது. காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சித்தது விசாரணையில் வெளிவந்துள்ளது” என்றார்.

அச்சம்

எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோர், “காங்கிரஸின் மேலிடத்துக்கு கட்டுப்பட்டுதான் ஒரு சிறந்த மேலாளர் என்பதை நிரூபிக்க கெலாட் இந்தத் திரைக்கதையை எழுதியுள்ளார். அவர்கள் அச்சமடைந்துள்ளனர்” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் கேஷ்வாட், ”இந்த நாடகத்தின் கதை, திரைக்கதை, நடிகர் என அனைத்தையும் செய்வது காங்கிரஸே” என்று குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: கமல்நாத் மீது சிவ்ராஜ்சிங் சவுகான் தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.