ETV Bharat / bharat

தவறான முடிவுகள்: ரேபிட் பரிசோதனையை நிறுத்திய ராஜஸ்தான்

ஜெய்ப்பூர்: கரோனா வைரஸ் தாக்குதலை விரைந்து கண்டறிய உதவும் ரேபிட் கிட்களில் தவறான பரிசோதனை முடிவுகள் வந்ததால் ராஜஸ்தான் மாநிலம் தற்காலிகமாகப் பரிசோதனைகளை நிறுத்தியுள்ளது.

Rajasthan ceases use of rapid testing kits as most results invalid

author img

By

Published : Apr 21, 2020, 3:20 PM IST

இது குறித்து ராஜஸ்தான் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரகு சர்மா கூறுகையில், "இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட ரேபிட் கிட் பரிசோதனை மூலம் 90 விழுக்காடு கரோனா பெருந்தொற்றினை விரைவில் கண்டறியலாம் என எண்ணினோம். ஆனால் இந்தப் பரிசோதனை 5.4 விழுக்காடு மட்டுமே சரியான முடிவுகளை அளித்துள்ளது. எனவே, இந்த ரேபிட் கிட்களால் எவ்வித பயனும் இல்லை" எனக் கூறினார்.

ரேபிட் கிட்களின் முடிவுகள் குறித்து ஆராய அரசு மருத்துவமனை ஒன்றில், நுண்ணுயிரியல் துறைத் தலைவர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது என்று சொன்ன அவர், அவர்களின் ஆராய்ச்சி முடிவில் 5.4 விழுக்காடு மட்டுமே துல்லியமான முடிவுகளை அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

இந்தக் குழுவின் ஆலோசனைப்படி, மாநிலத்தில் ரேபிட் கிட் கொண்டு மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதை நிறுத்தியுள்ளதாகவும், இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்குப் புகாரளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுவரை இந்தக் கருவிகள் மூலம் மாநிலத்தில் 168 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதாகவும், முன்னதாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட சோதனை முடிவுகளும் தவறாக வந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விளக்கமளித்தபின், இந்தக் கருவிகளை திருப்பியளிக்க உள்ளதாகக் குறிப்பிட்டார்.

முன்னதாக ரேபிட் டெஸ்ட் கிட்களில் கோளாறு இருப்பதாக மேற்கு வங்க மாநிலமும் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரேபிட் டெஸ்ட் கருவிகளில் கோளாறு - மேற்கு வங்க அரசு குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.