ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. இம்மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தையடுத்து துணை முதலமைச்சர் சச்சின் பைலட் மற்றும் அமைச்சர்கள் இருவர் அதிரடியாக கட்சி மற்றும் ஆட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் மாநில அரசை விமர்சித்து மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ராஜஸ்தான் அரசு தறிகெட்டு ஓடுவது வருத்தமளிக்கிறது. முதலமைச்சர் பைலட்டை துரத்துவதில் மும்முரம் காட்டுகிறார்” என தெரிவித்திருந்தார்.
-
Sad to see Rajasthan Govt. on auto-pilot because the CM is busy chasing a Pilot.#RajasthanPoliticalCrisis
— Gajendra Singh Shekhawat (@gssjodhpur) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sad to see Rajasthan Govt. on auto-pilot because the CM is busy chasing a Pilot.#RajasthanPoliticalCrisis
— Gajendra Singh Shekhawat (@gssjodhpur) July 13, 2020Sad to see Rajasthan Govt. on auto-pilot because the CM is busy chasing a Pilot.#RajasthanPoliticalCrisis
— Gajendra Singh Shekhawat (@gssjodhpur) July 13, 2020
மற்றொரு பதிவில், கிளர்ச்சியை பார்த்தால் அரண்மனையில் நிறைய அதிருப்தியாளர்கள் இருப்பது போல் தெரிகிறது. தலைமை ஆசிரியர் மகன் பள்ளியில் எவ்வாறு முதலிடம் பெறுகிறான்?” எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
ராஜஸ்தானில் 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அப்போது தனக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் சச்சின் பைலட் காத்திருந்தார்.
இதற்கிடையில் அவர் எதிர்ப்பார்த்த பதவி கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று (ஜூலை14) சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்கள் இரண்டு அமைச்சர்களும் கட்சி மற்றும் ஆட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ராஜஸ்தான், முதலமைச்சர் வீட்டில் அவசரக் கூட்டம்