ராஜஸ்தான் மாநிலத்தில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க சட்டம் இயற்ற வேண்டுமென அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை நாட்டில் முதன்முதலாக சட்டமாக இயற்றவுள்ளது ராஜஸ்தான் அரசு.
முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று (அக். 26) நடைபெற்ற காணொலி மாநாட்டில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “ கரோனா நோய்த்தொற்றுப் பரவலைச் சரிபார்க்க மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்க மசோதா இயற்ற மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த மசோதா வரும் சட்டப்பேரவை அமர்வில் தாக்கல் செய்யப்படவுள்ளது. என்றார்.
மேலும், அக்டோபர் 2ஆம் தேதி மாநிலத்தில் தொடங்கப்பட்ட 'நோ மாஸ்க்-நோ என்ட்ரி' பிரச்சாரத்தின் வெற்றிக் குறித்து கலந்துரையாடினார்.
அப்போது, கரோனாவைத் தோற்கடிப்பதற்கான பரப்புரையுடன் தொடர்பு கொள்ளவும், ஒவ்வொரு வீட்டிற்கும் செய்தி பரப்ப உதவவும், அவர் என்சிசி, என்எஸ்எஸ் இயக்கங்களுக்கு அழைப்புவிடுத்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால், ஆரோக்கியமான நபருக்கு கோவிட் தொற்றுநோயைப் பரப்ப முடியும் என்பதை மக்கள் அறியாமல் இருக்கும் வரை, இந்தப் பரப்புரை வெற்றிகரமாக இருக்காது.
மேலும், தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதால் மாசு அதிகரிக்கின்றன. இது கோவிட் -19 நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும். மருத்துவ ஆலோசகர்களுடன் சென்று, பட்டாசு இல்லாமல் தீபாவளியை இந்த முறைக் கொண்டாட வேண்டும். மற்றவர்களும் இதைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.