கடந்த மே மாதம் 8ஆம் தேதி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்) பிளாஸ்மா தெரபி சிகிச்சையின் செயல்திறனை மதிப்பிட தேசிய நெறிமுறைகள் குழுவிடம் (National Ethics Committee) ஒப்புதலைப் பெற்றது.
முன்னதாக, பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்கும் முறை, சில இடங்களில் பின்பற்றப்பட்டது. இது, கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் ரத்த அணுக்களை எடுத்து, பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் முறையாகும்.
இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அடுத்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மேற்பார்வையில் ராய்ப்பூர் எய்ம்ஸ், பிளாஸ்மா தெரபியை செயல்படுத்த ஒப்புதல் பெற்றுள்ளது.
இந்தச் சிகிச்சை முறையை கர்ப்பிணிகளைத் தவிர, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யலாம்.
இதையும் படிங்க: கரோனா சமூகப் பரவலாக மாறியுள்ளதா? - ஆராய்ச்சியை தொடங்கிய ஐசிஎம்ஆர்