ETV Bharat / bharat

வெள்ளத்தில் மூழ்கிய தெலங்கானா - மூன்று பேர் உயிரிழப்பு!

தெலங்கானா: கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் கனமழையால் ஹைதராபாத் நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.

flood
flood
author img

By

Published : Oct 18, 2020, 2:46 PM IST

Updated : Oct 18, 2020, 3:12 PM IST

தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்தின் முக்கிய நகரங்களான வனஸ்தலிபுரம், எல்.பி. நகர், செகந்ராபாத், குட்கப்பள்ளி, ஹைடெக் சிட்டி, மெஹந்திபட்டினம், அட்டப்பூர், சவுராஸ்தா, அரம்கர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்தக் கனமழையில், சுவர்கள் இடிந்து விழுந்தும், மின்சாரம் தாக்கியும், மலையோரப் பகுதிகளில் பாறைகள் சரிந்தும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மலக்பேட்டில் உள்ள யசோதா மருத்துவமனை அருகே மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

வெள்ளப்பெருக்கால் பல்வேறு சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோல்கொண்டா, லங்கர்ஹவுஸ் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன. வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

சீர்படுத்தும் மாநகராட்சி பணியாளர்கள்
சீர்படுத்தும் மாநகராட்சி பணியாளர்கள்

இதுவரை நாகோலில் 16.9 செ.மீ மழை, பிர்ஜாதிகுடா, சரூர் நகரில் 16.6 செ.மீ, எல்.பி.நகரில் 16.4 செ.மீ, ஹப்சிகுடாவில் 15.3 செ.மீ, 14.9 செ.மீ ராமந்தபூர், உப்பலில் 14.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: மேலும் 26 பேர் கைது!

Last Updated : Oct 18, 2020, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.