உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் - முகலசராய் ஆகிய பகுதிகளுக்கு இடையேயான 417 கிலோமீட்டர் தொலைவிலான ரயில் பாதையில் புதிய கட்டுமானம், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிகளை மேற்கொள்ள பெய்ஜிங் தேசிய ரயில்வே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனத்துடன் கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியன் ரயில்வே ஒப்பந்தம் மேற்கொண்டது.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இதன் பணிகள் மிக மெதுவாக நடைபெற்றுவந்தது. இதனால், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க தவறியதைச் சுட்டிக்காட்டி, சீன நிறுவனத்துடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தை இந்தியன் ரயில்வே வெள்ளிக்கிழமை (ஜூலை17) ரத்து செய்தது.
தற்போதுவரை வெறும் 20 விழுக்காடு பணிகளை மட்டுமே பெய்ஜிங் தேசிய ரயில்வே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனம் முடித்துள்ளதாகவும் ரயல்வே துறை அலுவலர்கள் கூறியுள்ளனர்.
உலக வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் நிறைவேற்றப்படுவதால், சீனா நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து கடந்த ஏப்ரல் மாதமே உலக வங்கியிடம் இந்தியன் ரயல்வே தெரியப்படுத்தியிருந்து.
"மிக மெதுவாக பணிகளை மேற்கொண்டுவருவதால் சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நாங்கள் ரத்து செய்துவிட்டோம். சீன நிறுவனத்தால் பெரியளவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. திட்டத்தை ரத்து செய்தது குறித்து இதுவரை உலக வங்கியிடமிருந்து எங்களுக்கு தடையில்லா சான்றிதழ் கிடைக்கவில்லை.
சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, எங்கள் சொந்த நிதியில் இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று உலக வங்கியிடம் தெரிவித்துள்ளோம்" என்றார்.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தக் கட்டுமான பணிகளில் பயன்படுத்தும் தொழில்நுட்ப ஆவணங்களை இந்தியன் ரயில்வேயுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆனால் இதற்கு சீன நிறுவனம் தயக்கம் காட்டுகிறதாகவும் இந்தியன் ரயில்வே உயர் அலுவலர்கள் கூறுகின்றனர்.
"இது தவிர கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் சீன நிறுவனத்தின் எந்தவொரு பொறியாளர்களும் இல்லை, இது ஒரு முக்கிய பிரச்னை.
மேலும், கட்டுமான பணியாளர்களை பெற உள்ளூர் நிறுவனத்துடன் எவ்வித ஒப்பந்த்தையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை. இது கட்டுமானத்தை மேலும் தாமதப்படுத்தியது" என்றுபதும் ரயில்வே அலுவலர்களின் வாதம்.
பலகட்ட பேச்சுவாரத்தைக்கு பின்னரும் கட்டுமானப் பணிகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் இந்தியன் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியா- சீனா ராணுவத்திற்கிடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து சீன நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்யப்போவதாக பல அரசு துறைகள் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
இதையு படிங்க: ஒப்பந்தங்களின் அடிப்படையில் சர்வேத விமான போக்குவரத்து!