2021 டிசம்பர் மாத இறுதிக்குள் 6,000 ரயில் என்ஜின்களில் ஜிபிஎஸ் வசதியை பொருத்த இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்களின் செயல்திறன் மேம்படவும், பயணிகள் பாதுகாப்பை உறுதிசெய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ், இந்தியன் ரயில்வே முன்பே 2,700 மின்சார என்ஜின்கள் மற்றும் 3,800 டீசல் என்ஜின்களில் ஜிபிஎஸ் வசதியை பொருத்தியுள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் முன்னெடுப்பாக ரயில்வே துறை முழுக்க டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளது. எனவே 2021 டிசம்பர் மாத இறுதிக்குள் 6,000 ரயில் என்ஜின்களில் ஜிபிஎஸ் வசதியை பொருத்த திட்டமிட்டுள்ளோம். இதனால் செயற்கைகோள் மூலமாக ரயில்களை கண்காணிக்க முடியும். இஸ்ரோவுடன் இதுதொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ரயில்களின் செயல்திறன் மேம்படவும், பயணிகள் பாதுகாப்பை உறுதிசெய்யவும் இந்த முயற்சி பெரிதும் உதவும் என தெரிவித்தார்.