ETV Bharat / bharat

வெளிமாநில தொழிலாளர்களுக்காக 1150 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன: பியூஷ் கோயல்

author img

By

Published : May 17, 2020, 4:28 PM IST

டெல்லி: ஊரடங்கால் சிக்கித் தவித்த 15 லட்சத்துக்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்களுக்காக 1150 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Goyal
Goyal

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மே 15ஆம் தேதி நள்ளிரவு நிலவரப்படி, ஊரடங்கால் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் தவிந்துவந்த வெளிமாநில தொழிலாளர்களுக்காக 1150 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், கடந்த 15 நாள்களில் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அனைத்து பயணிகளுக்கும் உணவும், தண்ணீரும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

  • Mission "Back Home" in Full Steam: Railways has transported more than 15 lakh stranded people so far by running 1150 Shramik Special Trains.

    During the last 3 days, Railways has transported more than 2 lakh people per day. pic.twitter.com/7YwXk4Ijrj

    — Piyush Goyal (@PiyushGoyal) May 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “கடந்த மூன்று தினங்களாக, நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர், சிறப்பு ரயில்களில் பயணம் செய்கின்றனர். வரும் நாள்களில் ஒரே நாளில் மூன்று லட்சம் பயணிகள் என்ற எண்ணிக்கையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திரா, குஜராத், டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, கோவா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மே 1 முதல் மே 15ஆம் தேதி வரை 1150 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன” என்றார்.

இதையும் படிங்க:ஊரடங்கால் மஹாராஷ்டிராவுக்கு நடந்தே செல்லும் கூலித் தொழிலாளி குடும்பம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.