ETV Bharat / bharat

ரயில்வே உயர் அலுவலருக்கு கரோனா: மூடப்பட்ட தலைமையகம்!

டெல்லி: ரயில்வே அமைச்சகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று இருப்பது உறுதிசெய்யபட்டுள்ளது. இதனால், சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக இரண்டு நாள்களுக்குத் தலைமையக அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

கரோனா
கரோனா
author img

By

Published : May 26, 2020, 10:30 AM IST

நாடு முழுவதும் கரோனா தீநுண்மியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ரயில்வே அமைச்சக தலைமையகத்தில் பணிபுரியும் மூத்த அலுவலர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், "ரயில்வேயில் பணிபுரியும் அலுவலருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய அறை உள்ளிட்ட பகுதிகளைத் தீவிரமாகச் சுத்திகரிப்பதற்காக ரயில்வே தலைமையகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களையும் மே 26, 27 ஆகிய தேதிகளில் மூட முடிவுசெய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தலைமையகத்தின் நான்காவது தளத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும் கிருமிநாசினி கொண்டு முழுமையாகச் சுத்தம்செய்ய ஏதுவாக வரும் மே 29 வரை மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைமையகத்தின் மூத்த அலுவலர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால், அவருடன் பணியாற்றிவந்த 14 அலுவலர்களும் அவரவர் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவு
ரயில்வே வெளியிட்டுள்ள உத்தரவு

கடந்த இரண்டு வாரங்களில் ரயில்வே அமைச்சகத்தில் பணிபுரியும் ஊழியர்களில், ஐந்து பேர் தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சூலூரில் களமிறங்கும் இந்திய விமான படை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.