கூகுள் நிறுவனம், அரசு பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் இருக்கும் ரயில் நிலையங்களில் இலவச வை-பை சேவையை வழங்கி வருகிறது. சோதனை அடிப்படையில் மும்பை ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்ட இந்த இலவச சேவை படிப்படியாக மற்ற ரயில் நிலையங்களிலும் அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் ரயில்டெல் நிறுவனத்தைச் சேர்ந்த மேலாண்மை இயக்குநர் பூனித் சாவ்லா கூறுகையில், கடந்த 2ஆம் தேதி மட்டும் 74 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் தற்போது 2,000 ரயில் நிலையங்களில் இலவச வை-பை சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
ராஜஸ்தானில் உள்ள ராணா பிரதாப் நகர் ரயில் நிலையம் இலவச வை-பை வசதி கொண்ட நாட்டின் 2000ஆவது ரயில் நிலையமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.