ETV Bharat / bharat

ரயில்வே திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு - பியூஷ் கோயல்

author img

By

Published : Sep 23, 2020, 12:58 AM IST

டெல்லி : மக்களவையில் மதுரை எம்பி சு.வெங்கசேடன் எழுப்பிய கேள்விக்கு, ரயில்வே திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார்.

parliement
parliement

மக்களவையில் கேள்வி எண் ஆயிரத்து 731இல் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், ரயில்வே பிங்க் புத்தகத்தில், 2019-20ஆம் ஆண்டு வரையில் ஒப்புதல் பெற்று பெருமளவில் பணி தொடங்கப்பட்ட திட்டங்கள், 2018-19 மற்றும் 2019-20ஆம் ஆண்டு வெவ்வேறு இடங்களிலான பணிகளை இணைக்கும் குடைத் திட்டங்கள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து பதிலளித்த அமைச்சர் பியூஸ் கோயல், இந்த நிதியாண்டு இறுதிவரை புதிய திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும், பாதுகாப்பு மற்றும் அவசரப் பணிகள் மட்டும் நிறுத்தப்படாது என்று பதிலளித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய சு.வெங்கடேசன், "ரயில்வே திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படுவது வருந்தத்தக்க முடிவு. ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்கள் இந்த நிதியாண்டு முழுவதும் நிறுத்தப்படுவது ரயில்வே மேம்பாட்டை மட்டுமின்றி, வேலை உருவாக்கத்தையும் பாதிக்கும். இந்தியா, மிகப்பெரும் வேலையிழப்பு, வேலையின்மை நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது அரசு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.

வேலை உருவாக்கத்தில் அரசு ஈடுபட வேண்டும் என்பதே சரியாக இருக்க முடியும். ஆனால், அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ள திட்டங்களையும் முடக்குவதென்பது எதிர் திசையில் பயணிக்கும் விஷயம். இது ஏழை எளிய குடும்பங்களையும் இளைஞர்களையும் கடுமையாக பாதிக்கும். மத்திய அரசு ரிசர்வ் வங்கியில் கடன் வாங்குவதன் மூலம் எந்த ஒரு திட்டமும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும்.

இதில், தமிழ்நாடு எல்லைக்குள் வரும் புதிய வழிப்பாதை, அகலப்பாதை இரட்டை வழித் திட்டம் ஆகியவை தற்காலிக நிறுத்தப் பட்டியலில் இல்லையென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டிலும் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகவே, அமைச்சரின் பதிலை தென்னக ரயில்வே பொது மேலாளர் உறுதி செய்வதோடு அதற்கான நிதி தங்கு தடையின்றி வந்துள்ளதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "ஒட்டுமொத்த நாட்டையும் கார்ப்பரேட்களுக்கு விற்கும் முனைப்பில் மோடி அரசு செயல்படுகிறது" - க.பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.