பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழா உரையில், பிளாஸ்டிக் இல்லா சுகாதாரமான இந்தியாவை உருவாக்க மக்கள் முன்வரவேண்டும் என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் மறு சுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய ரயில்வே அமைச்சகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுடுள்ளது. அதில், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய, ஐம்பது மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க தடை விதித்துள்ளது.
இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மறு சுழற்சி செய்யக்கூடிய பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் வலியுறுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் மீதான இந்த தடை தேசப்பிதா காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் இரண்டாம் நாளிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.