மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலின் தாயார் சந்திரகாந்த கோயல் இன்று (ஜூன் 6ஆம் தேதி) அதிகாலை மும்பையிலுள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 88.
சந்திரகாந்த கோயல் மும்பை மாநகராட்சி உறுப்பினராக ஒருமுறையும், பாஜக சார்பில் மாதுங்கா சட்டப்பேரவை உறுப்பினராக மூன்று முறையும் இருந்தார். இச்சூழலில், தனது தாயாரின் இழப்பு குறித்து ட்விட்டரில் அமைச்சர் பியூஷ் கோயல் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
அதில் "எப்போதும் என்னைப் பாசத்தோடும் அன்போடும், வழி காட்டிய என் அம்மா இன்று காலை காலமானார். அவர் தனது முழு வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தவர். மற்றவர்களுக்கு எப்படி சேவை செய்ய வேண்டும் என்பதை எங்களுக்கும் கற்றுக்கொடுத்தவர். எனது தாயின் ஆன்மா இறைவனடி சேர பிரார்த்தனை செய்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தாயாரை இழந்துவாடும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதிலிருந்து விடுபட அவருக்கு வலிமையைக் கொடுக்கவும் தாயாரின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எல்லை விவகாரம் : இந்திய சீன ராணுவ துணை தளபதிகள் இன்று பேச்சுவார்த்தை