கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தில் 40 வயது நிரம்பிய ஒருவர் சாக்லேட் தருவதாக அழைத்துச் சென்று 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் மாவட்டத்தின் சிந்தனூர் தாலுகாவில் உள்ள ஆர்.எச். கேம்ப் பகுதியில் நடந்துள்ளது. 40 வயதுள்ள ஒருவர் 4 வயது சிறுமிக்கு சாக்லேட் தருவதாக அழைத்துச் சென்று இரண்டு நாட்களுக்கு முன்னர் பாலியல் வன்புணர்வு செய்ததாகத் தெரிகிறது.
சிறுமிக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில் சிறுமி பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்டுள்ளது உண்மை என தெரிய வந்திருக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அமுல் மொஹல்தார் என்பவர் மீது, காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்தும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டனர். ஆனால், அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரைக் கைது செய்யும் முயற்சியில் காவல் துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணமான பெண்ணுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை!